+மனைவியின் குருவி நட்பு!+
தினம் தினம் சன்னலில்
சோறு வைப்பாள்!
வரும் ஒவ்வொரு குருவிக்கும்
பேரு வைப்பாள்!
சோறு சமைக்காட்டி தின்பண்டம்
போட்டு வைப்பாள்!
யார் என்ன சொன்னாலும்
காதுல போடமாட்டாள்!
குருவிங்க தினம் வீடு
வந்து போகும்!
மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி
தந்து போகும்!
தருமத்தை தன் குரலில்
போற்றி போகும்!
மறக்காம அவ பேர
சொல்லிப் போகும்!
நடந்தது இது ஒரு
தொடர்கதை போல்
தொடர்ந்தது அவ வீடு
போகும் வரை
ஆயாச்சு அவ போயி
பத்து நாளு
வீடு திருப்பத்தான் ஆயிடுமே
பத்து மாசம்
தினம் போல குருவிங்க
வந்து போகும்!
தனியாய் அல்லாடும் எனப்பாத்து
நொந்து போகும்!
சமையல் கலையத் தான்
நான்இன்னும் கத்துக்கல!
குருவிக் கூட்டத்தை ஏமாத்த
மனம் ஒத்துக்கல!
கடையில் சாப்பிட்டு வரும்வேளை
மறக்காமத் தான்!
குருவி நட்புக்காய் பொட்டலம்தான்
வாங்கி வந்தேன்!
சன்னலில் வைத்து விட்டு
குருவிவர காத்திருந்தேன்!
பொண்டாட்டி நெனப்பையும் தள்ளிவைத்து
எதிர் பார்த்திருந்தேன்!
எதிர் பார்த்தது போலவே
வந்தது குருவி!
அதைப் பார்த்ததும் மனசுக்குள்
பொங்குது அருவி!
நான்வச்ச சாப்பாட்டை அது
தொடவே இல்லை!
அது ஏனென்று எனக்கொன்றும்
புரிய வில்லை!