அனுதினமும் முயன்றிடு அவனியில் அழகாய் மிளிர்ந்திடு

ஆறுமுகனை
அல்லாவை
அவனியின் மைந்தர் இயேசுவை
அமைதியின் அரசர் புத்தரை
அனுதினமும்
அழுது புறண்டு
அல்லல் நீக்க
அழைத்தாலும்
அசையாது விதி உன்
அணு அளவு முயற்சியின்றி......

தந்தையின் மிதிவண்டி
தன் சுயசரிதையில்
தாரளமாகச் சொல்லும்
விந்தை மனிதன் வடித்த
வியர்வையின் கதைகளை.....

தாயின் கருக்கருவாள்
தலை குனிந்து வணங்கும்
தாரகை அவள் கரம்
தவறிக்கிழித்த நொடிகளில்....

பேதை அவர்கள்
பெரும் வலி கண்டு
தரும் பணம் அள்ளி
பெருமை கொண்டு
பிதற்றாமல்
சிறும் வயதில்
சிதையாமல்
உற்ற கல்வி கல்
கற்று உலகை வெல்....

புத்தகம் போல்
புத்தி
புகட்ட
புவியில் சிறந்த
வித்தகரில்லை
இணைய வலை
இணைப்பில்
முகப்புத்தகம் புகுந்து
மூழ்கிக்கிடக்காமல்
நூலகம் தேடி
நூறாயிரம் புத்தகம் படி
நூதன வாழ்வில் முன்னேற
இதுதான் முதல் படி....

முயற்சி செய்
முடிந்த வரை
முடிந்து போனதை
இணைந்து பேசி
இழக்காதே
இனிய நொடிகளை
மலரும் நினைவுகளை
மணக்கப் பேசி
மறைந்து போனபின்
மலராத
மணித்துளிகளை
மரணிக்க வைக்காமல்
முனைந்து போராடு
முட்டி மோது
பாறையானாலும்
பனியாய் உதிரும்
இருளானலும்
இனிதாய் விலகும் .....

கல்லில் உள்ளது
காணும் இடம் எல்லாம்
நிறைந்திருப்பது
நின் கடவுளல்ல
அன்னையும் பிதாவும்
செய்யும் தொழில்களெல்லாம்
உன் கடவுள்கள்!!!!
இன்னல் வரும்
நேரமெல்லாம்
ஆலயம் நாடி
அற்பனே
அலையாதே.....

அனுதினமும் முயன்றிடு
அவனியில் அழகாய் மிளிர்ந்திடு.....

எழுதியவர் : நஞ்சப்பன் (13-Sep-13, 1:07 am)
பார்வை : 72

மேலே