தேர்தல் தெரு விழா

எங்கள் ஊரு சந்துபொந்தெல்லாம்

பச்சை என்றும்
பச்சை மஞ்சள் என்றும்
நீளம் சிவப்பு என்று
கலர் கலராய் !

திருவிழா காலத்து
முட்டாசு கடைகள் போல
அழகு அழகாய் ...

எனது வீட்டு முச்சந்தி அது

நேற்று
ஒருவன் வந்து
குரங்கு வித்தை காட்டிப் போனான்

நாலைந்து பெருசுகளும்
ஏழெட்டு சிறுசுகளும்
கைகொட்டி போனார்கள்

அதே இடத்தில் இன்று ஒருவன்
செத்த பாம்புகளை ஆட்டுவிக்கிறான்
சில பாம்புகளை
மூக்கில் விட்டு
வாயில் எடுக்கிறான் .

விசில் சத்தம் வானை பிளக்கிறது .

தூரத்தே ஓர் அசரீரி
நாளையும் இத்தெருவில் யாரோ ஒருவன்
யானையை பூனையாய் மாற்ற போவதாய் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (13-Sep-13, 12:32 am)
பார்வை : 72

மேலே