அனுபவங்கள் பல விதம்

அனுபவங்கள் பல விதம்
நல்லதும் கெட்டதும்
வந்து பல வழியில்
முட்டும் போது
மனம் தாழ்ந்தும் எழும்பியும்
பெருமிதமும் சஞ்சலமும்
அடைந்து துன்பம்
கண்டு துவளும் போது
ஒரு வெறுப்பும் வெற்றிடமும்
தொக்கி நிற்கிறது .
சிலர் புரிந்து செயல்படுவர்
சிலர் தெரியாமல் அவ வலையில்
வீழ்ந்து நசிந்து போவர்.
அப்போது அழுகையும்
வெடித்து சிதறி
கலங்க அடிக்கும்
அவரவருக்கு வந்தால் தான் தெரியும்
தலை வலியும் திருகு வலியும்
வெளியில் இருந்து கொண்டு
என்னவெல்லாம் சொல்லலாம்
எப்படியாயினும் சொல்லல்லாம்
நினைத்து பார்த்த மட்டும்
தெரியும் வெளிச்சம் இல்லாமல்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Sep-13, 11:30 pm)
பார்வை : 124

மேலே