இறைவனின்......
பிறந்து அன்னை மடி
பார்க்கும் குழந்தையின்
பஞ்சு ரோஜா பாதங்களுக்கு
தெரியாது....
இந்த பாதங்கள்
மருத்துவமனையில்
மற்றவர்க்கு சேவை செய்ய
பிறந்ததா??
அல்லது மற்றவர் உயிர்
எடுக்க செல்ல நடக்க பிறந்ததா என்று??
தொடவே கூசும்
தொட்டாலும் கூச்சத்தில்
சுருங்கிக் கொள்ளும்
குழந்தையின் பிஞ்சு
கரங்களுக்கு தெரியுமா
இந்த கரங்கள் எந்த
துறைக்கு போகப் போகிறது என்று??
எல்லாமே இறைவனின் அருஞ்செயல்........
ஆன போதிலும்
அன்னையின் முயற்சியிலும்
வளரும் குழந்தையின் கையிலும்
இருக்கிறது அதன் எதிர்காலம்........