+மச்சானப் பாத்தீங்களா?+
முரட்டு மீச மச்சானே!
உம்மேல் ஆச வச்சேனே!
மிரட்டி உருட்டும் உலகிலே
பாசம் வச்ச அத்தானே!
அதட்டும் அம்மா புடிக்கல!
வெரட்டும் அப்பா புடிக்கல!
கருத்த ராசா உன்னத்தான்
எனக்கு ரொம்ப புடிக்குமே!
வெவரம் தெரிஞ்ச நாள்முதலா
வெளையாட வந்த அத்தானே!
பருவம் வந்த நாள்முதலா
ஒதுங்கிப் பழகும் அத்தானே!
வேணுமின்னே உன்ன நானும்
சீண்டி பாக்கும் நேரத்துலே
பொய்க்கோவம் காட்டி போயிடுவ!
முழுசாய் என்னை ஜெயித்திடுவ!
படிக்கும் போதும் நீவார
நெனைக்கும் போதும் நீவார
உறங்கும்போதும் நீவார
நேரில் பார்த்தோ நாளாச்சு!
படிச்சு முடிச்ச உடனேயே
பட்டணம் உழைக்க போனவரே!
பாவிங்க வலையில் சிக்காம
பவிசா வந்திடு எனமணக்க!
எனக்காய் வரும்நாள் காத்திருப்பேன்!
புதுசாய் உனக்காய் பூத்திருப்பேன்!
மனசை ஆளும் மன்னவனே!
மயக்கும் அழகு சின்னவனே!
பட்சணம் எதுவும் புடிக்கலையே!
கரிசனம் காட்டுங்க எம்மேல!
பட்டணம் வாழும் பெரியவங்க
மச்சானப் பாத்தா சொல்லுங்க!