@@@நம் நாட்டின் கிறுக்கல்கள் @@@
மலராத மொட்டுக்களிலும்
தேன் உறிஞ்சப்படுகிறது
====பாலியல் குற்றம் ====
மரங்களில் மலர்கின்றன
துப்பாக்கி குண்டுகள்
====வன்முறை ====
விருட்சங்கள் விதையிலே
அழிக்கப்படுகின்றன
====கருகலைப்பு ====
பெற்றெடுத்த தாயாலும்
திருத்தமுடியவில்லை
கேடுகெட்ட பிள்ளையை
====லஞ்சம் ஊழல்====
வேர்வையின் உழைப்பில்
வந்தவை செல்லாகாசுகள்
====பொருளாதாரம் ====
ஓடி ஓடி உழைத்ததால் ஓய்வு
எடுக்கிறது வங்கியில் பணம்
====கருப்பு பணம் ====
இருக்கிறதென நான்
சொல்லி முடிக்கையில்
இல்லாமல் போகிறது
====மின்சாரம் ====
உணவும் காய்கறியும்
பார்வையால் மனம் நிறைகிறது
வயிறு காய்கிறது
====விலைவாசி ====
...கவியாழினி...