என் கவிதையின் கண்ணீர்

உன்சோம்பேரி தனத்திற்கோர் எல்லை இல்லையா?
பின்னாளில் அவதியுறுவது தொல்லை இல்லையா?
என்னை எழுதாமல் உனக்கென்ன வேற வேலை ?
தினம்வீணாக நேரத்தை கழிக்கிறதே உன் மூளை!
என்மீது உனக்கென்ன வீண் கோபம்?- அதை நீ
என்னிடம் சொல்லிவிடு தீர்ந்துவிடும் என் சோகம் ?

அதிகம் கற்காத உனக்காக நான் இரக்கப்பட்டு
நீ பட்ட கஷ்ட்டங்களை எண்ணி வருத்தப்பட்டு
உனக்காக என்னை நானே அர்பணித்தேன்
அதற்காக நீ என்னை வழி பட்டாய் !
அது ஒரு காலம் ! அற்புத ஜாலம் !
நீ புரிகின்றப்போது என்னுள் மாயம்
நிகழுமே அது இப்போ எங்கே காணோம்?

நல்ல வாய்ப்பை எதிர்நோக்கி நீ நடந்தாய்
நாளெல்லாம் நடுரோட்டில் நீ திரிந்தாய்
உன் வாதத்தை ஏற்றுக்கொள்ள யாருமில்லை
ஓ ! அந்த பாவிகள் ஞானிகள் இல்லை !
என்றுதானே உன்னை நீயே கழட்டிக் கொண்டாய்
ஏமாற்றம் என்பதனை வெறுத்துக் கொண்டாய்
நீ வெறுக்கும் ஏமாற்றம் வெற்றிப் பெற்று
தோல்விகளை தகர்த்தெரியும் நாள் என்று ?
கணக்காக நான் சொல்ல வேண்டுமென்றால்
உன்கவி சிறக்க நீயின்னும் முயலவேண்டும் !

ஏழை வர்க்கம்தானே உனக்கு போதி மரம் !
அவரை பாடவில்லையேல் உனக்கா தூக்கம் வரும்?
சமூதாய சீரழிவுகள் உன்னுள் வேரோடி-வார்த்தைகள்
கடும் சூறாவளி காற்றாக சுழன்றடிக்குமே சதுராடி
அதையெல்லாம் எங்கேதான் நீ தொலைத்தாயோ?
அடபாவி உன்னை நீயே அழித்து ஒழித்தாயோ ?
இன்னுமென்ன உன்னை நான் சொல்லித் திட்ட ?
என் கண்ணீரை துடைக்க அருகில் வா கிட்ட !

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (13-Sep-13, 11:32 am)
பார்வை : 58

மேலே