எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[17]

வெறுப்பு நெருப்பில்
என்னைச் சுட்டெரித்தாலும்
கவலைப்பட மாட்டேன்
சாம்பலாகவும் சம்மதிப்பேன்

உன் நினைவு வேர்களுக்கு
உரமாகும் பாக்கியமாவது
கிடைக்கும் அல்லவா ?!!
[39]
*****************

நீ
என்னைத் தழுவலாம்
அடிக்கலாம் உருட்டலாம்
உருக்குலைக்கலாம்
காற்றாக வந்து.

ஆனாலும்
நான்
வாழ்ந்து மகிழ்வேன்
உன்னை விலகாமல்
உனக்குள் சுழலும்
பூமியாக !!
[40]
*****************
*****************

எல்லாம் உனக்கே !!
****************************

எனது ஊர்வலத்தின்
பாதையில்
வண்ண மலர்க்
கோலங்களின்
அழகைக் காண்கிறேன்

என்னைத்
தழுவிச் செல்லும்
புகழெனும்
தென்றலின் வருடலால்
நெகிழ்ந்து நிற்கிறேன்

தனிமை இருளில்
தடுமாறியவனை
ஒளிவெள்ளத்தில்
மிதக்கவிட்ட
உன்னை ஆராதிக்கிறேன்

கவிஞரென்ற வரிசையில்
என்னை
கடைசியிலாவது
நிற்கத் தகுதி தந்த
உன்னை வணங்குகிறேன்

கவிதைத் தொகுப்புகளில்
என் பெயர் இருக்கும்
என்றாலும்
கவிதை முழுவதும்
நிறைந்திருப்பாய்
நீ !!
[41]
***********வணக்கம்********
****************************************
"எனது குறிப்பேட்டின் பக்கங்கள்" கவிதைத் தொடருக்கு இதுவரை ஆதரவு கருத்து வாழ்த்து மற்றும் அன்பையும் தந்து என்னை நெகிழச்செய்த அன்பர்களுக்கு நன்றி. இதுவரை இந்தத் தொடரை தொடர்ந்து எழுதுவதற்குக் காரணமான நீங்கள் கொடுத்த ஊக்கத்திற்கும் நன்றி. நன்றி.

எழுதியவர் : RATHINA (13-Sep-13, 12:15 pm)
பார்வை : 100

மேலே