காதலாய் ஒரு புன்னகை வேண்டும்

ஏ அழகியே உன் அழகிலே
என்னை மயக்கிப் போனது ஏனடி

காதல் பாதையில் நான் போகையிலே
உன் நினைவுகள் சிதறிச் சிதறிக் கிடக்குதடி

எங்கும் உன்னையே நான் கண்டேன்
எல்லாமே உன் குரலாய் கேட்க்குதடி

ஒரு நொடி கூட என்நெஞ்சம்
உன்னை மறக்க நினைக்கவில்லை

என் நினைவிலும் வரும் கனவிலும்
எல்லாமே நீதானடி பெண்ணே

உன் தலைக்கனம் அந்த செல்லக்கோபம்
எல்லாமே ரசிக்கிறேன் இந்த காதலால்

இந்த காதல்சுகம் வேண்டும் என்று
மீண்டும் மீண்டும் நெஞ்சம் கேட்கிறதே

கனிவாய் ஒரு பார்வை நீயும் பாரடி
காதலாய் ஒரு புன்னகை பூத்திடடி

ஏ அழகியே
என் அழகியே உன் அழகிலே
என்னை மயக்கிப் போனது ஏனடி

எழுதியவர் : ஆனந்த் கி லிங்கம் (13-Sep-13, 12:09 pm)
சேர்த்தது : anandklingam
பார்வை : 126

மேலே