மண நாளை எதிர்நோக்கி
திருமண நாளை எதிர்நோக்கி
என்ஜீவன் தினம் அலைகிறது
தூங்கும் நேரம் இன்ப கனவுகளை
மிக சூட்சகமாக வெளியிடுகிறது
வாழ்க்கை என்னும் பாத்திரத்தில்
நல்ல வசந்தம் வீசப்போகிறது
விரைந்து வாடியம்மா ராசாத்தி
வாலிப நெஞ்சம் அழைக்கிறது !
குலம் காக்க வருபவளே
குடும்ப பொறுப்பை ஏற்பவளே
என்வீட்டில் வசதிகள் குறைவுதான்
அதனால் விரக்தி நீ அடையாதே !
நீ வந்தால் வசதி
தானாக வருமென்ற நினைப்பு
உன்னை பெண்ப்பார்த்த நாளன்றே
நான் போட்டுவிட்டேன் கணக்கு !
சொந்தக் காலில் நிற்பதற்கே
எப்போதும் எனக்கு பிடிக்கும்! – அது
என் மாமியார் வீடென்றாலும்
இல்லை கைநீட்டும் பழக்கம் !
உண்மையைதான் சொல்லுகிறேன்
பொய்யென்று கருதாதே !
என் நேர்மைக்கு கிடைத்தப் பரிசாக
நீ எனக்கு கிடைத்தாயே !
அது ஒன்றேப் போதும்
என் வாழ் நாள் முழுதும்
உனை வைத்து காப்பாற்ற
இறை அருள் உதவும் !
வசதிகள் வந்தால் வாழ்க்கை இனிக்கும்
வாழ்க்கை இனித்தால் உறவுகள் மதிக்கும்
சிகரங்களை நோக்கி பறப்போம் வா... !
சிறகுகள் இல்லாத குறையை தீர்ப்போம் வா..!