யாருகிட்ட கொடுக்கணும் மிஸ் ??

புதியதாக கற்றுகொடுக்க வந்த கணினி ஆசிரியரும்,
புதிதாய் கணினி கற்க வந்த 1ம் வகுப்பு மாணவனும்
கணினி பயிற்சி மையம் ஒன்றில்
----------------------------

ஆசிரியர் : இன்னிக்கு நோட்பேட்- ல் எப்படி காப்பி, பேஸ்ட், கட் பண்ணுவது எப்படின்னு பார்க்கலாம் சரியா ?
மாணவன் : சரிங்க மிஸ்
ஆசிரியர் : முதல்ல டெக்ஸ்ட் (Text)எல்லாத்தையும் “செலக்ட் பண்ணனும்.
அதுக்கு கண்ட்ரோல் பிளஸ் ஏ (Ctrl+A) கொடுக்கணும்.
அப்புறம் காப்பி (copy) பண்ண கண்ட்ரோல் பிளஸ் சி (Ctrl+C) கொடுக்கணும்.
இதுபோலத்தான், டெக்ஸ்ட் கட் (Cut) பண்ண கண்ட்ரோல் பிளஸ் எக்ஸ் (Ctrl+X) கொடுக்கணும்

காப்பி, கட் பண்ணியத பேஸ்ட் (Paste)பண்ண கண்ட்ரோல் பிளஸ் வி (Ctrl+V)கொடுக்கணும்.
------------------ …………………..
மாணவன் : (அப்பாவித்தனமாக ..) ம்ம்மிஸ்ஸ்ஸ் … எனக்கு ஒரு டவுட்டு மிஸ் , எல்லாத்தயும் பண்ணி யாருகிட்ட கொடுக்கணும் மிஸ் ?? சொன்ன போய் கொடுத்திட்டு வரேன் மிஸ்.. சொல்லுங்க

ஆசிரியர் : !!!!! (இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது )
மாணவன் : சொல்லுங்க மிஸ் சொல்லுங்க !

--------------------------------------------------------
------> இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (13-Sep-13, 9:00 pm)
பார்வை : 210

மேலே