சிறிய மழையில் சிங்கார சென்னை

​சிறிய மழையை தாங்கவில்லை
சீரழியும் சிங்கார சென்னை !
சிரிப்பாய் சிரிக்கிறது சாலைகள்
சீறிப் பாய்கிறது சிற்றலைகள் !

மக்கள் தொகையுடன் போட்டியிங்கு
வாகன உறபத்தி வாரந்தோறும் !
அகன்ற வீதிகள் குறுகிய வழியாகிறது
அன்றைய சாலைகள் சிறிதாகிறது !

​மாநகர் பரந்து மாதம் ஒருநகராகிறது
ஏரி குளங்கள் எல்லாம் வீடாகிறது !
வயல் வரப்பெல்லாம் மாடியாகிறது
வழியாய் இருந்தவை குழியாகிறது !

செப்பனிடும் பணியும் செத்துவிட்டது
சரி செய்யும் வேலையும் நின்றது !
சாலைகள் சீரமைப்பு மறைந்து விட்டது
சான்றாய் படமும் நமக்கு காட்டுகிறது !

வீதிகளும் மூழ்குகிறது கொட்டும் மழையால்
விதியென சென்றிடுவார் வாக்களித்தவரும் !
முறையிட்டால் முறைக்கின்றனர் துறையினர்
முற்றுகைப் போராட்டமும் வீணாய் போகிறது !

திருந்தாத அரசியல் வாதிகள் வருந்துவதில்லை
தேர்தல் காலம்தவிர வீதிகளில் வருவதுமில்லை !
அளித்திடும் வாக்கும் அல்லல்படவே வைக்கிறது
அளிக்காத ஓட்டும் அவர்களுக்கே விழுகிறது !

முடிவே இல்லை முழுமையான தீர்விற்கு
விடிவே இல்லை வருந்திடும் நமக்கும் !
நோயும் பரவுது நம் ஆயுளும் குறையுது
அவதியும் நமக்கு சகதியில் வாழ்ந்தால் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Sep-13, 10:43 pm)
பார்வை : 60

மேலே