நம் காதலின் முகவரி...
காலை நேரம் கதிரவனின் கதிர்களால்
மலர தொடங்கும் பூக்களோடு
மணிகணக்காய் நிற்கிறேன்
பேருந்து நிறுத்தத்தில் ....
விரைவில் வருவாய் என நினைவில் ஒத்திகை பார்க்க ...
நான் செல்ல வேண்டிய பேருந்துகள் எனதருகே வந்து செல்ல ....
நீ வருவாய் என சற்று தள்ளி நின்றேன்...
இதயத்தில் ஏதோ சில மாற்றங்கள்
தொலைவில் நீ வருவதை உணர்த்தேன்...
கண்கள் நான்கு பக்கமும் தேடி சென்றது உன்னை...
அருகில் நீ வர வர அசையாமல் இருந்தது எனது கண்கள் ...
வெட்கப்பட்டு நீ உன் நண்பர்களிடம் சிரித்து பேசுகையில் சிலிர்கிறது என் இதயம் ...
வழி தெரியாத பேருந்தில் உனது விழி பார்க்க ஏறிவிட்டேன் ....
(என்னவோ எனக்கு பின் இருக்கை தான் கிடைத்தது...)
காற்றில் கவிதை பாடும் உனது கூந்தல் என்னையும் சற்று கேலி செய்தது ...
இறங்குவதற்குள்
சொல்ல நினைத்தேன் என் காதலை...
சொல்வதற்குள் படிகள் அருகே சென்றாய்
இறுதியில்
நான் உதடுகளில் சொல்ல நினைத்ததை
நீ கண்களில் சொல்லி சென்றாய்.....