சிந்தையில் உதிக்கும் விந்தைகள்

சிந்தையில் உதிக்கும் விந்தைகள்
சிந்திக்க தூண்டிடும் வித்துக்கள் !

வந்துபோகும் ஆயிரம் ஆயிரம்
சிந்துபாடும் பாமாலை பாயிரம் !

நிலையாய் நிற்பவை சொற்பமே
நித்திரை கலைத்திடும் நிச்சயமே !

வழியினை காட்டிடும் வாழ்விலே
வடிகாலாய் அமையும் வாழ்ந்திட !

புதினங்கள் தோன்றும் புதுமையாய்
புத்துணர்வு தந்திடும் புதுபிறப்பாய் !

உதவிகள் புரிந்திடும் உலகிற்கும்
உதவிடும் நமக்கும் ஊன்றுகோலாய் !

சிறுதுளி சிந்தனையே பெருகிடும்
சிற்றுளி சிற்பமாய் உருவாகிடும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Sep-13, 9:04 am)
பார்வை : 84

மேலே