அன்பே அனைத்துமாய்.....
இத்தரை பூமி யாவின் இயக்கம்
அன்பினால் அன்றோ
இயற்கை கோள்கள் அன்பனைத்தும்
புவியில் மனிதர் மீதன்றோ!!!
சூரியன் மேல் கொண்ட அன்பில்
பூமி அதனை சுற்றல் காணீர்
பூமியின் மேல் கொண்ட அன்பில்
நிலவும் பூமி சுற்றல் பாரீர்!!!
மனிதர் மீதில் பூமியன்பை
என்னவென்பது - கொண்ட
அன்பினாலே மனிதர் பாதம்
பூமியுந்தான் ஈர்த்துக் கொள்ளுது!!!!
காற்று வைக்கும் அன்பினாலே
உலகம் வாழுது
சுவாசமத்தில் காற்று நீங்க
உலகில் உயிரினமேது??
கருவில் உரு வானநாளில்
தோன்றும் அன்றே அன்பு
உருத் தெரியாதபோதும் கிடைத்திடுமே
அருமை தாயின் அன்பு!!!
தந்தையுந்தன் குழந்தையிடம்
காட்டும் பாசம் அன்பே
முதி யோரிடம் இளையவரும்
செலுத்தும் கருணை அன்பே!!!
காளையிடம் கன்னியுந்தான்
கொள்ளும் காதல் அன்பே
காதல் கொண்டவரும்
கலந்து மகிழும் காமமது அன்பே!!!
கடவுள் மீது மனிதர் வைக்கும்
பக்திதானே அன்பு
மனிதர் வாழ்வில் கடவுளுமே
பொழியும் அருளும் அன்பு!!!
அன்பில்லா(ர்) வாழ்க்கையிலே
மகிழ்ச்சி சேர்வதில்லை
அன்பின் முன்னே உலகனைத்தும்
அடிபணியும் உண்மை!!!
அன்புடன்,
சொ. சாந்தி