உனக்குள்ளும் காதல் மலரும்

என் இதயத்தின் இந்த வலிகள்
வார்த்தைகள் தந்த ரணம் அல்ல
உந்தன் மெளனம் செய்த யுத்தம்
என் கண்களில் இந்த நீர்த்துளி
எந்தன் விரல் தீண்டி வந்ததல்ல
உந்தன் பிரிவு தந்துச்சென்ற காயங்கள்
என் காதல் நீ அறியாதிருக்கலாம்
ஆனால் என் காயம் நீ அறிவாய்
அவை நீதந்த வலிகளால் வந்தது
உன் தனிமையின் நிமிடங்களில் எண்ணிப்பார்
நீ காயம் செய்த இதயத்தை - அப்போது
உனக்கும் காதல் வரும் காதல்மீது