வேரறுத்து சாய்த்திடடா... வீரத் தமிழா...

பிள்ளையை கிள்ளிவிட்டு
தொட்டிலை ஆட்டுபவன்
தாலாட்டு பாடி என்ன??
அழுகைதான் நின்றிடுமா??
துன்பம்தான் நீங்கிடுமா?!!!

சுயநல வாதிக் கூட்டம்
காப்பதுபோல் அடிக்கும் கொட்டம்
நடிப்பினிலும் நடிப்பென்றானால்
தினம் மடியும் தமிழனுக்கு
விடிவதுதான் எந்நாளோ??!!!

அரக்கர் சூழ்ந்த தீவினிலே
இரக்கமற்ற உயிர்ப் பலிகள்
உறவறுந்த நிலையினிலே
ஓலமிடும் மக்களினம்
விடும் கண்ணீர் கடல் பெருக்கும்!!!

கண்ணீர்க் கடலினிலும்
தெப்பம் விட்டு பார்க்கும் இனம்
இனத்திதயம் எங்கே போனதடா
தமிழரினம் வாழுதற்கு
நாளும்... நாளும்... எத்தனை "தடா"!!!

பயங்கரவாதம், சீர்குலைவும்
சுதந்திரமாய் ஆட்டம் போடுதடா
அமைதியாய் வாழமட்டும்
அனுமதி இங்கு இல்லையடா
நாளும்.. நாளும்... மனம் வேகுதடா!!!

சீர்குலைக்கும் இனத்தையெல்லாம்
வேரறுத்து சாயத்திடத்தான்
வீறுகொண்டு நிற்கும் தமிழன்
வெற்றிகண்டு கொடியேற்றி
கொடை நாட்டும் நன்னாள் வருமே!!!

எழுதியவர் : சொ. சாந்தி (18-Sep-13, 8:18 pm)
பார்வை : 99

மேலே