காணமல் போனான் என் கவிஞன்
இமைக்குள் வந்த காதல் என்னை
இமைகாமல் செய்யுதடி
நான் தூங்கி நாட்களானது !
பூத்த புன்னகை என்னை
புலம் பெயர்த்தது
என் முகவரி உன்னிடம் உள்ளது !
என் பெயரை நீ உச்சரித்த போதுதான்
என்னக்கே என்னை பிடித்தது
பெயருக்கு கூட நிறம் உண்டு போல !
கவிதை எழுத நினைத்து காகிதம் தொட்டால்
உன் பெயர் மட்டுமே மிச்சமாக
நிஜமாக காணமல் போனான் என் கவிஞன் !