இல்லை என்றால் .....!!!!

நீரில்லை என்றால்
மீனினம் இங்கில்லை ....!

நிலவில்லை என்றால்
இரவில் ஒளியில்லை ....!

நிலமில்லை என்றால்
உயிர்கள்வாழ வழியில்லை ....!

நிறமில்லை என்றால்
பூக்களில் பொலிவில்லை .....!

நிழலில்லை என்றால்
மரமிருந்தும் பயனில்லை ....!

நிஜமில்லை என்றால்
நிழலுக்கு இடமில்லை ....!

நிதியில்லை என்றால்
மனிதர்க்கு வாழ்வில்லை.....!

நீதியில்லை என்றால்
நாட்டில் அமைதியில்லை....!

நிம்மதியில்லை என்றால்
நித்திரை வருவதில்லை .....!

நிறைவில்லை என்றால்
கவிபடைத்தும் பலனில்லை ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Sep-13, 10:51 pm)
பார்வை : 90

மேலே