கொஞ்சமாவது மிச்சம் வை என்னை ..............///////////////////
ஏதோ ஒரு சந்திப்பில் -நீ அன்றுமுதல்
தினம் வந்து போகிறாய் வர்ணிப்பில்
வார்த்தையை ,கவிதையாய் ,அதன் கருவாய்
அழகின் உருவாய் என .....
எல்லாமுமாய் மாற முடிகிறது உன்னால்
ஏனோ உன் நினைவில் இருந்து மட்டும்
மீள முடிவதில்லை என்னால் ...
என் கவிதைகாலங்கள் வட்டமிடும் உன்னைசுற்றியே
காதலுக்கான வருடங்கள் சற்று அதிகம்தான்
என் ஆயுட்காலத்தில் ..............
கொஞ்சமாவது மிச்சம் வை என்னை
நிலவையும் மலரையும் ,மழலை மொழியையும்
ரசித்து கவி சொல்லிட ...............