அந்த ஒரு தருணத்தில் .........................//////////////////////////////

என் சாலையில் மாலை வேளையில்
பூஞ்சோலை ஒன்று சேலை கட்டி போனதின்று
-அழகு பெண்ணவள்
என்னை கடந்து போன நொடிமுதல்
தன்னிலை இழக்கிறேன் அவளை காண்கையில்
இன்னும் சொல்லிட என்னிடம் நான் இல்லை ......

அவளின் பாத சுவடுகள் ஓவிய கவிதைகள்
அசைவின் நளினங்கள் வானவில் வண்ணங்கள்
கண் பேசிடும் வார்த்தைகள் மழலை கொஞ்சல்கள்
தன்னிலை இழக்கிறேன் அவளை காண்கையில்
இன்னுமும் சொல்லிட என்னிடம் நான் இல்லை .....

அன்ன நடையினில் மெல்லிசை காட்டுவாள்
அதிரும் என் மனம் அவள் பாதம் நடக்கையில்
சின்ன சிரிப்பில் சில்மிஷம் செய்கிறாள்
வர்ணனை செய்திட என்னை தூண்டினாள்
கவிதை சொல்லி புலம்ப செய்கிறாள்

இரண்டு கண்கள் போதுமா
அவள் அழகை ரசித்திட
ஆயிரம் கண்கள் வேண்டுமே என்றே தோன்றுமே
தன்னிலை இழக்கிறேன் அவளை காண்கையில்
இன்னுமும் சொல்லிட என்னிடம் நானில்லை .....

இரவு நிலவு போல் என்னெதிரே நடந்திட
என் இளமை கனவுகள் அவள் நிழலில் சரிந்திட
உச்சி வெயிலிலும் உள்ளம் குளிருதே
நாடு இரவு பகல் எது
பேதம் மறக்குதே .............

கனவுகள் தொலையலாம் காட்சியும் தொலையுதே
கண்ணால் காண்பதும் கனவாய் தோன்றுதே
தன்னிலை இழக்கிறேன் அவளை காண்கையில்
இன்னுமும் சொல்லிட என்னிடம் நானில்லை ....

அவள் காதல் துறை முகம்
தேடிடும் கப்பல் நான்
எனக்கு வழி சொல்லடி
என் கலங்கரை விளக்கமே
தடங்கல் இன்றியே காதல் சொல்லவே
தயக்க துடுப்பினை எரிகிறேன் தூரமே
உன் மௌனம் உடைத்தொரு
வார்த்தை சொல்லடி
மறந்திடு மறுத்திட
என்னுயிர் வாழவே ....
தன்னிலை இழக்கிறேன் அவளை காண்கையில்
இன்னுமும் சொல்லிட என்னிடம் நானில்லை

எழுதியவர் : ருத்ரன் (21-Sep-13, 9:33 am)
பார்வை : 95

மேலே