சாதி . . .

சாதியை ஒழிப்போம்! சாதியை ஒழிப்போம்!
என்று சொல்லியே பல உயிரை ஒழித்தோம்..

வன்முறை வளர்க்கும் ஆயத்தத்தில்
சாதி மட்டுமே முதலிடம்
இதுவே சில சதிகாரர்களின் புகலிடம், , ,

சாதி வளர்ந்தது முதலில் பள்ளிதான்.
சாதிதான் முக்கியம் என்றால் காலை வேலையில் பள்ளியில் சாதியை ஒழிப்போம் என்ற உறுதி மொழி எதற்கு>?

மாற்று சான்றிதழில் சாதியை தூக்கி எறிந்து சாதிக்க புறப்படுவோம்..

பல உயிர்களை குடிக்கும்
இந்த இரு எழுத்து நமக்கு வேண்டுமா?
சாதியால் நாம் பட்டபாடு போதுமா?

சாதி கலவரத்தில் இறந்தவர்களின்
ரத்தத்தை எடுத்து
தமிழ் அகராதியில் பூசுவோம்..

அவர்களின் மாசு கலந்த ரத்தத்தில்.
சாதி வார்த்தை மறைந்து போகட்டும் . . .

சாதியை மறப்போம்
சரித்திரம் படைப்போம். . .

எழுதியவர் : krish (21-Sep-13, 12:44 pm)
Tanglish : saathi
பார்வை : 123

மேலே