கண்ணுறங்கு மகளே

பழைய சோறு கரைச்சு குடிச்சு
பாதி வயிறுதான் நிறச்சு
அழுத குரல்தான் கேட்டு
அதையும் ஒதுக்கி வச்சுப்புட்டு
பால் குடிக்க துடிக்கிற என் மகளே
பாலூர மறுக்குதடி என் உடலே
காம்பு கடிச்சாலும் வலி பொருத்து
கடைசி வரை பசியாத்தி
கடமைய சொல்லி தாலாட்டுறேன்
மகளே
கொஞ்ச நேரம் கண்ணுறங்கு மகளே
ஜோலி முடியும் காலமாச்சு
கூலி கிடைக்கும் நேரமாச்சு
கதிரடிக்கும் களத்துமேடு
காத்திருக்கு என் உசிரெடுக்க
கொஞ்ச நேரம் கண்ணுறங்கு மகளே

எழுதியவர் : மாதவி (21-Sep-13, 12:44 pm)
பார்வை : 99

மேலே