நட்புதான் பெரிது !!

(இது உண்மைச் சம்பவம் ! பெயர்களை குறிபிடவில்லை . காரணம் தேவை இல்லை. இது என் கல்லூரி வாழ்வில் நடந்தது !)
எங்கள் கல்லூரி வாழ்க்கையில் மதிய உணவு
இடை வேளையில் நாங்கள் 8 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மதங்களில் ஒற்றுமை என்ற
தலைப்பில் மிகவும் ஆரோக்கிய விவாதம் செய்வது வழக்கம் . இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் . குறிப்பாக பலசெய்திகள் எப்படிபல மதங்களில் ஒட்ட்ருமையாக இருக்கிறது என்பதையெல்லாம் விவாதித்து
விளக்கம் பெறுவது உண்டு .
ஒரு சமயம் மாவட்டத்தில் சாதி கலவரம் மூண்டது . கலவரத்திற்கு பிறகு கல்லூரிக்கு
சென்றோம். எங்களுடைய நண்பர்களில் சிலர் பலநாட்கள் கழிந்தே கல்லூரிக்கு வந்தார்கள் .நாங்களும் மகிழ்ச்சியில் வழமைபோல் , மதிய சாப்பாட்டிற்கு பிறகு கூடிமகிழ தொடங்கியபோது , கலவர பாதிப்பு பேசப்பட்டது !
ஒரு நண்பன் அவன் ஊரில் நடத்தப்பட்ட அக்கிரமங்களையும் , அவன் வீட்டில் வெறிபிடித்தவர்கள்
75 வயதான நடக்க முடியாத பாட்டியை கட்டிலோடு தூக்கி தரையில் தூக்கி எறிந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது , எங்களோடு இருந்த ஒரு நண்பர் (துன்பநிலைக்கு இவர் சமுதாயம் கரணம் என்பதை அறியவும்,)
என்னை மன்னித்துவிடு என்று அழுதுகொண்டு , எல்லோர் கைகளையும் பிடித்தார் . இதனால் எல்லோர் கண்களும் அழுதன. நாங்கள் யாரோ அறிவின்றி செய்ததற்கு நீ அழவேண்டாம் என்று சொல்லியும் கேட்கவே இல்லை .
அன்று கல்லூரி முடிந்தபின் பாதிப்பிற்கு உள்ளானவன் வீட்டிற்கு அவனுடன் சென்று பார்க்கத் துணிந்தோம் . அவன் மறுத்து விட்டான் . காரணம் நீங்கள் அங்குவர அசம்பாவிதம் ஏதும் நடந்தால் என்னால் உங்களுக்கு பாதுகாப்பு தர இயலாது என்றான் .பயணம் கைவிடப்பட்டது !
3நாட்கல் கழிந்து (இந்த விசயம் அறிந்த ) எங்கள் ப்ரோபோச்சர் பாடம் நடத்தவன்தவர் மத ஒட்ட்ருமையை பற்றி சுமார் 15 நிமிடம் உரைஆற்றினார் . மேலும் எந்த மாணவன் அழுதானோ அவனை அழைத்து தன்பக்கம் நிறுத்திக்கொண்டு , இறுதியாக ,
நாம் மாணவ சாதி ! நமக்குள் வளரும்
சாதிதான் நட்பு சாதி !
வீடும் நாடும் சிறக்க இந்தமானவன்
நல்ல முன்னுதாரணம் என்று சொல்லும்போது அவர் கண்கள் கலங்கின !
வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களின் கண்களும் கண்ணீர் சிந்த எழுந்துநின்று
நன்றி தெருவித்தனர் !!
கல்லூரி முடிவில் அவனுக்காக நானெழுதிய
Auto கிராபில்
காதல்
இடித்து விடுகிறது
நட்பு
உடைந்த துண்டுகளை ஒட்டிக்கொண்டிருக்கிறது !!! என்று .

அவன் எழுதினான்
நட்பு பரமனின் கொடை , அது, வாழும் !!!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (21-Sep-13, 2:41 pm)
பார்வை : 61

மேலே