கிழியுங்கள் நாள்காட்டியை ....!

முதலில்
கிழித்துத்தெரியுங்கள்
அந்த நாள்காட்டியை .....!

என்
வசந்த காலங்களை
விரைந்து
வெளியேற்றிய
நாள்காட்டியை
கிழித்துத்தெரியுங்கள்....!

கனவு கண்டு எழுவது போல்
விரைந்து தீர்ந்து போயின
என் வாழ்க்கை காலங்கள்.......!

நேற்று
முளைத்த மீசை
அதற்குள்
வெள்ளையடிக்கப்பட்டு விட்டதே..?.

நாட்களின்
நகர்வுகளில்
தென்றலை விட
புயலே அதிகமான
புழுதியை
சுமத்தி விட்டு போயிற்று
இந்த நாள்காட்டி மீது....!

நேற்றைய தூசிகளை
தட்டி கிழிப்பதற்குள்
இன்றைய தூசிகள் ....!

சேவர்க்கொடியோன்
நாள்காட்டியில்
கைகளில் சாமரம் எதற்கு
என் தூசுகளை தட்டாமல் ...?

எழுதியவர் : வெற்றி நாயகன் (22-Sep-13, 6:47 am)
பார்வை : 267

மேலே