+நானாக உனை விட்டுப்போக விரும்பியதில்லை!+

நானாக உனை விட்டுப்போக விரும்பியதில்லை!

நீயே தான் உன்னாலான வழியில்
என்னை விட்டுவிலக‌
என்னென்ன வழிமுறையோ
எல்லாவழியிலும் முயற்சி செய்தாய்!

உன்னை விட்டு விலக நினைக்காத‌
என் விடாமுயற்சியின் முன்னால்
என்னை நீ, உன்னை விட்டு விலக்க நினைத்த‌
உன் விடாமுயற்சி வென்றுவிட்டது!

இதோ
நான் உனைவிட்டு நிரந்தரமாய் விலகுகிறேன்!
இனி நீ எத்தனை முறை கதறி அழுதாலும்
என்னால் உன்னிடம் வரமுடியாது!

வருகிறேன்!
மீண்டுமொருமுறை முடிந்தால் சந்திப்போம்!

இப்படிக்கு,

உனக்கு மிகவும் பிடித்த‌
உன்னுடனே அதிக நாட்கள் இருக்க விரும்பிய‌
உன்னுடைய போதை, சிகரெட் பழக்கங்களால்
மிகவும் பாதிப்புக்குள்ளான‌
உன்னுடன் இருக்க விரும்பியும் தோற்றுப்போன
உன்னால் மிக கேவலமாய் விரட்டியடிக்க‌ப்பட்ட
கண்ணீருடன் உன்னை விட்டுப்பிரியும்

உன் உயிர்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (22-Sep-13, 8:14 am)
பார்வை : 84

மேலே