தானாக வளர்ந்த சிற்பங்கள்

"'மலை உச்சியில் மேகங்கள்'"

"'மரக்கிளை இடுக்கில் பறவைகள்'"

"'பசுமையை வளர்க்கும் தேயிலைகள்'"

"'பாம்பு நடைபோல் பாதைகள்'"

"'வீம்பூ செய்யும் குரங்குகள்'"

"'வீரம் காட்டும் புலிகள்'"

"'ஓட்டம் எடுக்கும் முயல்கள்'"

"'ஓடையை வெட்டும் நீர்விழ்ச்சிகள்'"

"'கண்ணை மறைக்கும் பூக்கள்'"

"'காதோரம் பேசும் தென்றல்கள்'"

"'எண்ணத்தை மாற்றும் புல்வெளிகள்'"

"'ஏக்கத்தை போக்கும் குயில்கானங்கள்'"

"'சாந்தம் செய்யும் பறவைகள்'"

"'சாறலை வீசும் பனிதுளிகள்'"

"'மோதலை நாடும் மூங்கில்கள்'"

"'பாடல்கள் ஆக்கும் புல்லாங்குழல்கள்'"

"'காதலை பேசும் கிளிகள்'"

"'காலம் தளறாத பாறைகள்'"

"'மொத்தத்தில் இயற்கை ஒரு ஓவியம்'"

"'அதை அழியாமல் காப்பது நமது காவியம்'"

எழுதியவர் : காந்தி. (22-Sep-13, 7:03 am)
பார்வை : 106

மேலே