திரும்பி பார்த்தேன்!
தினமும் காலையில் அருகிலுள்ள டீக்கடையில் சிறிது நேரம் கரைப்பது வழக்கம்..
அன்றும் எப்பொழுதும்போல் பரபரப்பான காட்சி..
தஸ்ஸு.. புஸ்ஸு..என்று நடைப்பயிற்சியில் பெருசுகள்!
கிளிங்..கிளிங்.. மணியோசையுடன் சைக்கிளை மிதிக்கும் செய்தித்தாள் மற்றும் பால் போடும் பசங்க!
கூவி.. கூவி.. விற்கும் காய்கறிகாரன்!
டுர்ரு..டுர்ரு.. இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலக பணியாளர்கள்!
பேருந்துக்காக காத்திருக்கும் பெரும் கூட்டம்..
சவாரிக்காக அவர்களை சுற்றிவரும் மூன்று சக்கரங்கள்..
என்று சுழன்று கொண்டிருக்க..
அருகில் பள்ளி வாகனத்துக்காக காத்திருந்த நாலு பசங்க
தங்களுக்கு கீழே கிடக்கும் கல், காகிதம், குச்சி போன்றவற்றை சற்று
தொலைவில் வைக்கப்படிருந்த குப்பைத்தொட்டியில், வீசிகொண்டிருந்தார்கள்! ஒரு மாணவன் மட்டும் ஒவ்வொருதடவையும் சரியாய் எறிந்தான்!
சட்டென பள்ளி வாகனம் வந்து நிற்க..
அந்த மாணவர்கள் களைந்து வண்டியை நோக்கி ஓட..
அந்த மாணவன் மட்டும் திரும்ப வந்து..
குப்பைதொட்டியில் விழாமல் வெளியே சிதரிகிடந்தவற்றை எடுத்து
உள்ளிட்டு சென்றான்!!
என் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தான்.
ம்ம்..திறமையும்..ஒழுக்கமும் ஒருங்கினைந்தவன் மற்றவர்களால் திரும்பி பார்க்கப்படுகிறான்!