அரும்பாய் போச்சு

அரும்பாய் போச்சு
என் பேச்சு !
அத்தனையும்,
தமிழை நேசிப்பதால் ஆச்சு !
கருவறையில் எனை சுமந்த
என் தாயின் உள்உணர்வுகள்
அத்தனையும் அங்கீகாரம் பெற்றன,
நான் உச்சரித்த
"அம்மா"
எனும் ஒற்றை வார்த்தையில் !
தமிழ் எனக்களித்த வரம் இது ,
வேறெந்த மொழியும் கொடுத்திடாது !
உணர்வுகளை உச்சரிக்கும் மொழி
என் தாய் ,
எனக்களித்த தமிழ் மொழி!
என் செவிகளைத் தீண்டும்
செந்தமிழை சுவாசிப்பவன் நான் !
கண் பார்க்கும் இடமெல்லாம் - தமிழ்
பண்பாட வேண்டும் என்று,
கனவு காண்பவன் நான்!
தமிழ்த்தாயின் குழந்தை நான்,
தமிழ் பேச்சில் மழழை தான்!
அரும்பாய் போச்சு
என் பேச்சு !
அத்தனையும்,
தமிழை நேசிப்பதால் ஆச்சு !

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (25-Sep-13, 8:03 pm)
சேர்த்தது : பெலிக்ஸ் ராஜன் .ரெ
பார்வை : 96

மேலே