ஜாதகம் பார்க்க வேண்டாம்

பார்க்காமலே, முகம் பார்க்காமலே
கல்யாணமாம் கல்யாணம்
தாத்தாவுக்கும் ,பாட்டிக்கும் !

பார்த்து, பார்த்து குணம் பார்த்து, நிறம் பார்த்து கல்யாணமாம் கல்யாணம்
அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் !

இவர்களுக்கு,

சிறப்பாயிருந்தது வாழ்க்கை
செழிப்பாயிருந்தது வாழ்க்கை

மகிழ்ச்சி கூடியது
சந்ததிகள் கூடியது

ஜாதகம் பார்க்கவில்லை
நட்சத்திரம் பார்க்கவில்லை
பத்து பொருத்தம் பார்க்கவில்லை
குறையொன்றும் காணவில்லை

காலம் மாறியது,

ஜோசியம் பார்த்தால் சோதனை குறையும் என்றார் ஜோசியர் !
சோகம் கூடியது , வெளியே யாரும் சொல்வாரில்லை !

மணம் கூட மனப் பொருத்தம் போதும் என்றால்
கேட்பார் யாருமில்லை,

கஷ்டங்கள் கூடியது -

ஜோசியர் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றே,
அவர் வீட்டு வாசலிலேதினமும் தவம் கிடக்கிறோம் .

ஜோசியர்கள் பை நிறைக்க, கதை அளக்கிறார் ,
அவர் வார்த்தைக்கெல்லாம் செவி மடுக்கிறோம் .

ராகு, கேது , சனி , செவ்வாய் கட்டம் என்று சொல்லி,
நம் ம(ன)ணம் கெடுக்கிறார்.
பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிக்கிறார்,

பெற்றோர் ஒன்றும் புரியாமல் மனம்
பதைக்கிறார்.


திருமணப் பொருத்தம்.என்பது திணற வைக்கும் பொருத்தம்
ஜாதகம் பார்க்க வேண்டாம்,
பொருத்தம் பார்க்க வேண்டாம் என்றால்,
ஜோசியர் என் பிழைப்பு என்னாகும் என்கிறார்,

கட்டம் 12 , ராசி 12 ,நட்சத்திரம் 27 ,இது
தெரிந்தால் எல்லாம் தெரிந்த ஜோசியர்.
சொன்னது நடக்கும் என்கிறார்
அவர் வீட்டில் மாற்றி நடந்ததை யார் அறிவார்?

நல்ல குணம் கொண்டு வாழ்வோம்
நிறை கண்டு மகிழ்வோம்
மனம் பார்த்து மணம் முடிப்போம்

எழுதியவர் : arsm1952 (26-Sep-13, 12:08 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 543

மேலே