தென்றல் வந்து முதுகு தட்டும்
விண்ணுக்கு ஏணி அமைக்க
விபரமாய் இலக்கு வை.....
வீசும் தென்றல் உன்னருகில் வந்து
விரும்பியே முதுகு தட்டும்.....
எண்ணங்களின் வாசம் வாங்கி
எழில் மலர்கள் சிரித்திருக்கும்
எட்டுத் திசை கதிர் ஒளிகள்
ஏகோபித்தே கரவொலி எழுப்பும்...
உன் எண்ணமே உற்சாக பானம்
உதவ இனி யாருடா வேணும் ?!

