வாழ்த்துவோம் விழுதுகளை

( காது கேட்காத சிறுவர்கள் ,
திருப்பூர் )

சிறகு முளைத்த பறவைகள்
இறகு விரித்து பறக்கின்றன !

வேகம் துவக்கத்தில் மட்டுமா
தேகம் தேய்ந்திடும் வரையா !

இளமை துடிப்பும் தெரிகிறது
இலக்கை அடைய துடிக்கிறது !

குறை இருந்தும் குறைவில்லை
முறை ஒன்றும் மாறவில்லை !

ஒலியை அறிந்திடா இதயங்கள்
ஒலிகளை கேட்காத உள்ளங்கள் !

எதிர்காலம் நோக்கி ஓடுகின்றனர்
எதிர்வரும் தடைகளை தகர்த்திட !

வளமான வாழ்விற்கு வாழ்த்துவோம்
வலிவான நலத்திற்கு வாழ்த்துவோம் !

பழுதில்லா பாதையில் சென்றிடுவீர்
விழுதுகள் நீங்கள் வென்றிடுவீர் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Sep-13, 8:06 am)
பார்வை : 131

மேலே