என்று தணியும் சுதந்திர தாகம்
சாதி மத இனம் வன்முறை
ஒழிந்து விட்டது என்றால்
மறக்காது இருப்பார்கள்
இன்றைய மனு நீதிச் சோழர்கள்...!
மக்கள் பசி பட்டினி கொடுமை
ஒழிந்து விட்டது என்றால்
பொன் கரங்கள் சிவந்திருக்கும்
இன்றைய கொடை வள்ளல்களுக்கு ...!
லஞ்சம் ஊழல் சீட்டு கடன் தொல்லை
ஒழிந்து விட்டது என்றால்
மாறாது இருப்பார்கள்
இன்றைய ராம லக்குமணர்கள்...!
பெண்களின் சுதந்திரக் காற்று
உண்மையாக வீசியிருக்கின்றது என்றால்
மறக்காது இருப்பார்கள்
இன்றைய பாரதி அம்பேத்கர் பெரியார் போன்றோர்கள் ...!
தீய பழக்க வழக்கங்கள் அனைத்தும்
உண்மையாக ஒழித்து விட்டார்கள் என்றால்
மனம் மாறி இருப்பார்கள்
இன்றைய வாலி சுக்ரீவ ராவணர்கள்.....!
நேர்மை உண்மை பிற உயிர் துன்பம் வதை
நிகழவில்லை என்றால்
தடுத்து இருப்பார்கள்
இன்றைய புத்தரும் காந்தியும் ஏசுவும் நபிகள் நாயகர்களும்...!
ஈழத்தின் இனப் படுகொலை
நடந்து இருந்தது உண்மை என்றால்
நீதி நியாயம் காப்பாற்றி இருப்பார்கள்
இன்றைய சே அலெக்ஸாண்டர் இந்தியன் தாத்தாக்கள்...!