​​உலக இதய நாள் ( 29.09.2013 ) ​ ​( WORLD HEART DAY )​

இதயமில்லா உயிர்கள் இல்லை
இதயமே இயற்கையின் எல்லை !
இதயம் இருந்தும் சிலருக்கு இங்கே
இதயமும் இல்லை ஈரமும் இல்லை !

இதயம் நின்றால் மனிதன் இல்லை
இதயம் உள்ளோர் அறிவர் இதனை !
இதயம் காப்போம் இன்னுயிர் வாழ
இதய நாளில் சபதம் ஏற்போம் !

இதயத்திற்கு இதய நாள் இன்று
இதயம் காப்பதே என்றும் நன்று !
இதயங்களின் இடமாற்றம் காதல்
இதயம் முறிவதே காதலின் முடிவு !

இதயத்தின் ஈரமே ஈகை நெஞ்சம்
இதயத்தில் நஞ்சே இறுதியில் வஞ்சம் !
இதய மாற்றம் இக்கால மருத்துவம்
இதயம் நிலைக்க நிகழும் மகத்துவம் !

இதயங்கள் நாமும் இணைந்திருப்போம்
இதயங்கள் வாழ்ந்திட வழிவகுப்போம் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Sep-13, 8:34 am)
பார்வை : 742

மேலே