ஐவிரல்கள் !!

தோழமைகளே !
ஐவிரல்கள் ஐம்பூதங்களாக
நம் கையில்..

பெருவிரல் தீ
சுட்டுவிரல் காற்று
நடுவிரல் ஆகாயம்
ஆழிவிரல் நிலம்
சிறு விரல் நீர்

எழுத்தாளனே !
முதல் இருவிரலை
செயல்படுத்து !
அடுத்த மூவிரலை
அடக்கு !

தீயுடன் காற்றை
இணைத்திடு !
நடுவே எழுதுகோலை
புகுத்திடு !
அதனுள் ஆறாவது
அறிவு ரசாயனத்தை
ஊற்றிடு !
சமுதாய தாள்களில்
சிந்தனையை
பற்ற வை !

அதோ ! எரிகிறது பார் !
அவலங்களும் ….
அட்டுழியங்களும் …..


```````````````````````````````````^ இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (29-Sep-13, 9:15 am)
பார்வை : 379

மேலே