அன்னல் நபி பெருமான்

ஆமினா, அப்துல்லாஹ்வின்
அரு புதல்வ ராய் பிறந்தீர்,
அகிலத்து மானிடரின்
பொக்கிஷமாய் திகழ்ந்தீர்...

பொய் சொல்லத் தெரியாத,
பொல்லாங்கு அறியாத,
பொன் தூதுப் பெருமானே!
போற்றுகிறோம் உமை நாமே...

மது எந்தன் மானமென்றும்,
விலைமகள் தான் பெண்மையென்றும்,
சீரழிந்து கிடந்தோரை
சீர் செய்த சீமானே...

நீதிக்கும் நீதி சொல்லி,
அன்புக்கும் பாடம் சொல்லி,
அருட்கொடையாய் வந்துதித்த‌
அல்லாஹ்வின் திருத்தூதே...

இஸ்லாத்தின் எதிரிகளை
காவலராய் மாற்றுவித்தீர்,
இம்சைகள் செய்தோரை
கருணையுடன் மன்னித்தீர்...

பூலோக புத்திரனில்
உம் போலே யாருமுண்டோ???
பூமிக்கு வந்து சென்ற‌
பூமானைப் புகழ்வோமே!!!

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (29-Sep-13, 11:59 am)
பார்வை : 408

மேலே