நயாகரா நீர்வீழ்ச்சி..
அந்த நதிக்குத்தான்
அத்தனை வெண் கூந்தலா?
காடுகளையும் மேடுகளையும்
கைகுலுக்கிவிட்டு
கனேடிய மக்களின் மெய் நனைத்துவிட்ட மகிழ்ச்சியில்
உயரே இருந்து குதித்து
உல்லாச கீதம் படிக்கிறதே?
நீ நயாகரா இல்லை...
நீ கவிஞனின் வயாக்ரா ..அதனால்தான் உன்னை
கட்டியணைத்து நான்
கவிஎழுதும்போதேல்லாம் என்னுள்
கொட்டுகிறாய் கற்பனையை..
நீரின் வீழ்ச்சி என்றான் ஒரு கவிஞன் ..
நீரின் எழுச்சி என்றான் ஒரு கவிஞன் .
நான் சொல்வேன் .இது
நீரின் முக மலர்ச்சிதான்...
அதனால் தான் புன்னகைக்கும்போதேல்லாம்
பொங்கி எழுகிறது நதியின் சிரிப்பொலிகள்.