@@@ ரத்தானது விவாக(ம்)ரத்து @@@

புரிதல் சிறிது தவறிடவே
பிரிவு தேடிய நம்மனமும்
பிரிந்த பின் பதறுகிறது
உன்னை எண்ணி நானும்
என்னை எண்ணி நீயும்

மனம் கலந்த காதலும்
மணமுடித்த திருமணமுமாய்
வாழ்ந்த வாழ்வினை
மெல்ல அசைப்போடுகிறது
இதயம் எந்நாளும்


தனிமை அனலாகிறது
பிரிவு சுட்டெரிக்கிறது
மனது ரணமாகிறது
வாழ்க்கை வலிக்கிறது
உலகமே வெறுக்கிறது

உணர்வுகள் ஒன்றாகி
சங்கமித்த மனதினை
சட்டம் பிரித்திட்டு
பாசம்கொண்ட மனதிற்கு
சட்டதிட்டம் தெரியுமோ

சட்டம் பிரித்திட்டென
பூட்டுப்போட முடியுமோ
அலைபாயும் மனதிற்கு
அமைதியிழந்து தவிக்கும்
மனதின் வலி அறியுமோ

மன்னிப்பு கேட்க
மறுத்த மனங்கள்
மண்டியிடவும் தயாராகி
மன்றாடுகிறது மறுபடியும்
ஒன்றுசேரும் நாளுக்காய்

அன்புகொண்ட மனங்கள்
முடிவோடு வந்தன
மூச்சுவிடாது பேசின
மனதோடு மௌனங்களாய்
கண்கள் அருவியாய்

கரங்கள் ஆரத்தழுவின
மனங்களின் அழுக்கு
கண்ணீரில் சுத்தமானது
புதுமனதோடு இணைந்திட்டு
இன்றோடு ரத்தானது
@@@விவாகரத்து@@@

(சீதா தோழியும் சாந்தி அக்காவும் விவாகரத்து கவிதையில் கேட்டமைக்காக ரத்தானது விவாகரத்து இக்கவிதை இங்கே )

...கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (2-Oct-13, 11:45 am)
பார்வை : 154

மேலே