கல்வெட்டும் சொல்லும் உன் பேரு...,

வானம் வேறு பூமி வேறு..,
வானம் தாண்டி நின்னு பாரு..,
வாழ்க்கை சொல்லும் பேரு தான்டா...

கல்வி வேறு வேளை வேறு..,
கற்று கொண்டு நின்னு பாரு..,
கை கட்டும் பூமி தான்டா...

கண் கலங்கி நின்னால் எல்லாம்..,
கை கழுவும் பூமி இங்கு..,
கை வீசி நடந்து பாரு..,
வணக்கம் சொல்லும் சாமியும் தான்டா...

பிறந்த வண்ணம் ஏழையானாலும்..,
வளரும் எண்ணம் கோழையில்லை..,
உயர்ந்த பாரு நீயும் சொல்வாய்..,
உலகில் நானும் மனிதன் என்றுடா...

மயக்கம் கொள்ளாத ஆசையில்..,
தயக்கம் காட்டும் பாதையில்..,
விலகி போகாத உன் வாழ்கையில்..,
மீண்டும் அழைக்காதே பூமியில்...

சொல் சொல் மானிடா..,
சொர்ககம் இங்கே ஏதுடா..,
சொல்வதை விட்டு பாருடா..,
செஞ்சி காட்டி நில்லுடா...

கண்ணை மறைக்கும் கைகளும் உண்டு..,
கல்வியை உதைக்கும் கால்களும் உண்டு..,
விழுந்த எழுந்து நீயும் பாரு..,
கல்வெட்டுகள் சொல்லும் உன் பேரு கேளு....

சொல் சொல் மானிடா..,
சொர்க்கம் இங்கே ஏதுடா..,
சொல்வதை விட்டு பாருடா..,
செஞ்சி காட்டி நில்லுடா...,

எழுதியவர் : காந்தி. (2-Oct-13, 1:17 pm)
பார்வை : 298

சிறந்த கவிதைகள்

மேலே