பூதச் சிரிப்பினில் புனைந்துரை எள்ளினான்

பூரணன் தன்னை பூசிக்கும் நோக்குடன்
பூக்களைக் கொய்தேன் பலவேறு வண்ணத்தில்
பூரித்துக் கடவுளும் கொடையென அருளிட
பூபதி காதினில் பூபாளம் பாடினேன்!

பூசனை கண்டு புனகல் கொண்டிட்ட
பூவுல காள்பவன் புன்னகை செய்தான்
பூவிதயம் தாராமல் பூக்களைத் தருகிறாய்
பூத்தவுன் ஆசையில் புனிதமிலை யென்றான்!!

பூரமும் ஏற்றியென் பூண்டுடல் தாழ்த்தினேன்
பூவையாய் நின்றங்குப் பூருவ கவுளியில்
பூந்தமிழ்ப் பாமாலை பாதத்தில் படைத்தேன்
பூதச் சிரிப்பினில் புனைந்துரை எள்ளினான்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (4-Oct-13, 2:19 pm)
பார்வை : 82

மேலே