வள்ளல்
முகத்தில் அடித்தாற்போல் மூடப்படுகின்றவை
வாயிற்கதவுகள் மட்டுமல்ல
சிலரின் இதய கதவுகளும் தான்
இறைவன் வருவான் வாசலில்
இறைஞ்சி நிற்பான் யாசகம் ..
பெற்றவள் பசித்திருக்க
பசித்தோர்க்கு ஈந்த வள்ளல் என்ற
பெயர் பொறித்த பொட்டலம் தந்து
பெருமித நடை நடப்பான்
பெற்றவள் காத்திருப்பாள்
படைத்தவன் சிரித்து நிற்பான் ,,,

