முத்தம் ஒரு முடியாத தொடர்கதை.....!

காலை எழுந்தவுடன் பகலவன்
பூமிக்கு வெளிச்சமாக தரும் முத்தம்....!

விண்ணில் இருக்கும் நிலவு தன் பிம்பத்தால்
தண்ணீருக்குத் தரும் முத்தம்.....!

இரவிலும் பகலிலும் ஆசை ஆசையாய்
அனைத்திற்கும் தென்றல் தரும் முத்தம்....!

உழைப்பாளியின் வியர்வைத்துளி
பூமிக்குத் தரும் முத்தம்.....!

தாயின் உதிரம் அமுதாகி மழலையின்
இதழ்களில் அமுதம் தரும் முத்தம்....!

பசிக்கு புசித்தபோது
உணவிற்கு நம் இதழ்கள் தரும் முத்தம்....!

எழுதியவர் : நா.வளர்மதி. (4-Oct-13, 8:34 pm)
பார்வை : 88

மேலே