கற்ற கல்வித் தடம்

கற்ற கல்வித் தடம்

நீர் நீக்க இயலா இடம்
தீ தீண்ட குலையா குடம்
புயல் புசிக்க அகப்படா சடம்
எரிமலை எரிக்க பொசுங்கா படம்
பொறாமை பொசுக்க அழியா திடம்
ஆணவம் அடித்து நொறுங்கா கடம்
திருட்டு திருட முடியா மடம்
அன்பு அடக்கி அடங்கா அடம்
கோபம் கேட்டு கைமாறா வடம்
கற்ற கல்வித் தடம்....!!

...... நாகினி

எழுதியவர் : நாகினி (5-Oct-13, 2:52 pm)
பார்வை : 62

மேலே