ஒரு விரலாய்...மறுகுரலாய்...இருப்பாயடா (தொடர்-12----அகன் )
சாரல்பொட்டுக்களை சரமாக்க பலமலர்
கொய்து
தூறல் நூல்களில் துவளாமல் கட்டி
பந்தலிட்டேன்...
விண்மீன்களை விரைந்தழைத்து பலவிதமாயுனக்கு
கண்கவர் நகைபல் படைக்க மயனை விளித்துள்ளேன்.
திசுக்களினுள் கடித்திட மறந்துன் சிரிப்பில்
மயங்கி
கொசுக்களும் ரீங்காரம் துறந்து மண்டியிட்டுள்ளனவே
முகில் மென்மை குமிழ் சிரிப்பு குங்கும சிவப்பு
ஜவ்வாது
அகில் மணம் அம்புலி அழகு -இவை யாவும் உன் மறுபெயர்
பளிங்கு மேனி பவளவாய் பட்டு நூல் மென்மை-தமிழ் மொழி அழகு
பனிநீர் உணர்வு பனை நுங்கு உணர்ச்சி நீ
தனிச்சுவை விருந்து ...
உலகம் உன் வீடு சாதியற்ற உயிர்கள் உன் உறவு
அங்கு நீ
திலகம் என் திகழு. திசை எங்கும் படர்ந்து நாளும்
அறிவைத் தேடு...
(தொடரும் )