பொருத்தமானவளா...???!!!

கோடி இன்பம் நல்கும்
பொருள் கோடி நாடி
எனை நாடி ஏமாற
நான் விழையேன்...அன்பே!
உள்ளார்த்தமாய் உண்மை
ஒன்று நவில்கின்றேன்....
கழுத்தை நெரிக்கும்
துயர் வரினும்
சற்றும் கலங்கா
தன்நம்பிக்கை மனவலிமை
ஒன்றே என்றும் நிரந்தர
தாய் வீட்டு சீதனமாய்
என்னோடு கூட வரும்...
நான் உனக்கு
பொருத்தமானவளா என்று
யோசித்து நாடி வா...
கூடி வாழும் வாழ்வியலில்
வெற்றி முனைவர்பட்டம் பெறலாம்...!!

.... நாகினி

எழுதியவர் : நாகினி (5-Oct-13, 2:48 pm)
பார்வை : 71

மேலே