குறுங்கவி பெரு(று)ம்புதையல்..

நிறைந்த செல்வத்தால்
மனஅம்பலம் ஏறிவிட்ட மமதையில்
ஆர்ப்பரிக்குது அலைகடல்...
.........
இரத்த ஆற்றில்
எத்தனை முறை தேய்த்துக் குளித்தும்
சாதிநாற்றம் நீங்கவில்லை
கல்விசோப்பு கரைந்தது தான் மிச்சம்...!!
...........
குத்தும் சாதி முட்கள்
இருந்தும் உயிர்த்திடும்
காதல்மலர்...
...........
சுருளும் ஆரோக்கியம்
வளரும் நாடு வளர
சீவப்படும் மரம்...
...........
ஒளித் தேர்வில் தோல்வி
மனமுடைந்து இளையநிலா தற்கொலை
அமாவாசை கொண்டாட்டம்...

.... நாகினி

எழுதியவர் : நாகினி (5-Oct-13, 3:02 pm)
பார்வை : 63

மேலே