வாழ்த்து ....!! வாழ்த்து ....!!

எங்க வீட்டு செல்லராணி
தங்கமலர் அவளே ஆஷினி ...!

பார்வைக்கு இவளே பார்பிடாலு
சேட்டையில் நம்பர்ஒன் வாலு ....!

வெள்ளி கொலுசு கிலுகிலுக்க
துள்ளி ஓடும் வெண்ணிலா ....!

முத்துப்பல் சிரிப்பால் இதயமள்ளும்
சித்திரம்போலும் சின்ன ஏஞ்சல் ....!

கட்டிக்கரும்பு இவள் பேச்சு
சுட்டியிவளே என்னுயிர் மூச்சு ....!

மழலைமொழியால் ரைம்ஸ் பாட
குழலின் மதுரமும் தோற்றிடுமே ...!

கோன்ஐஸ்‌ பைவ்ஸ்டார் லாலிபாப்
என்றும் இவளின் பேவரைட் ....!

செல்போன் கேம்ஸில் கலக்கிடுவாள்
வில்போல் வளைந்து ஆடிடுவாள் ....!

டெட்டி பேருடன் படுத்திடுவாள்
கெட்டிக் காரியாய் படித்திடுவாள் ....!

விழிவிரித்து கேட்கும் வினாவிற்கு
விடைதெரியாமல் நான் விழித்ததுண்டு ....!

கவிதை போலும் பேச்சுக்களால்
வியக்க வைப்பாள் எனைஅவளே ...!

நவராத்திரியின் விழா நாளில்
நலமாய் வாழ வாழ்த்துகிறேன் ....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Oct-13, 3:59 pm)
பார்வை : 642

மேலே