இறுதி மூச்சு !

வல்வெட்டித்துறையில்
சூரிய புதல்வனை
பெற்றெடுத்த
உன் மூச்சு பனகொடா
சிங்களவன் முகாமிலா
நிற்கணும் !
அய்யோ
பகலவனை வளர்தெடுத்த
பாச கீற்று
இங்கோ போகணும் !
இன்று தமிழர்
உளம் வெதும்பி
இருண்டா சாகணும்...
அப்புவே தலைவனை
சுமந்த உன் மூச்சு,
இறுதி மூச்சின்
அனல்
ஈழத்தில் எரியுது
பார் இன்னும்...
தியாக மூச்சால்
விடியும் நம் மண்ணும் !!!

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (7-Jan-11, 8:05 am)
பார்வை : 724

மேலே