காவிரியாய் நீயும்...
நடமாடும் பிணமாய்
நான் இங்கு இருக்க
என் சோகம் உலகம் அறியலம்மா
சொல் ஒன்று விழுந்து
இதயமே நொறுங்க
உயிர் கூட வெறுப்பாய் போனதம்மா
முட்களை விரித்து என் வழி கொடுத்தாய்
தினந்தோறும் கரைய என் விதி படைத்தாய்
எந்தன் பூமி சுற்றவில்லை சத்தியமாய்
நீயும் வந்தால் சுற்றிவிடும் பக்குவமாய்
கானல் நீரு போல வாழ்க்கை தெரியுதம்மா
காவிரியாய் நீயும் என்று வருவாயம்மா!!!